சுக்குட்டிக் கீரையின் மருத்துவ பயன்கள்
மணித்தக்காளி / மணத்தக்காளி கீரையின் பயன்கள்
மணித்தக்காளி கீரையின் தண்டு, கீரை,பழம், அனைத்தும் சமையல் மற்றும் மருத்துவத்தில் பயன்படுகிறது. உடலுக்கு சத்துணவு பொருட்களை சரியாக அனுப்பிவிடுகிறது. மணத்தக்காளி கீரையில் போஸ்போரஸ், கால்சியும், இரும்புச்சத்து, வைட்டமின் "எ", "பி" உள்ளது.
மேலும் 100 கிராம் கீரையில் நீர்ச்சத்து 82.1%, புரோட்டீன் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புக்கள் 2.1% உள்ளது.
பார்க்கும் இடங்களில் எல்லாம் தானாக முளைத்து வளரக்கூடிய ஒரு வகை சிறந்த மூலிகை மணித்தக்காளி செடி ,இது சுக்குட்டிக் கீரை என்றும் மிளகு தக்காளி கீரை என்றும் சில பகுதிகளில் அழைக்கப்படுகிறது.
மணித்தக்காளி / மணத்தக்காளி கீரையின் மருத்துவ நன்மைகள்:
வாய்ப்புண், வயிற்றுப்புண் இவைகளை குணப்படுத்துவதில் சிறந்தது. ஏனெனில் வயிற்றில் புண் ஏற்பட்டால்தான் வாயில் புண் வருகிறது. இதனால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் இரண்டுமே குணமாகிவிடும்.
சிறுநீரகம்
சிறுநீரக கோளாறுகளை சரி செய்து சீராக செயல் படுத்தும் வல்லமை கொண்டது மணத்தக்காளி. வாரம் ஒரு முறை சுக்கிட்டி கீரையை சாப்பிட்டு வந்தாலே இதற்க்கு போதுமானது. நீர் அதிகம் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.
கல்லீரல்
கல்லீரல் பாதிக்கப்படுவதால் தான் மஞ்சள் காமாலை போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது. எனவே மஞ்சள் காமாலை உள்ளவர்கள் கல்லீரல் பாதிப்புகள் கொண்டவர்கள் ஏற்கனவே சாப்பிடும் மருந்துகளோடு மணத்தக்காளிக் கீரையை வேக வைத்து கஷாயம் போன்று தொடர்ந்து சாப்பிட்டு வர நோய் விரைவில் குணமடைய உதவி புரியும் அது மட்டுமல்ல மணத்தக்காளிக் கீரை இரத்தத்தைச் சுத்தப்படுத்தி ரத்த அணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும். இதை வாரம் இரண்டு முறை அதிக காரம் புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்
காச நோய், மூச்சு திணறல், கல்லீரல்
காச நோய் காச நோய் என்பது ஒரு வகையான கிருமி நமது உடலுக்குள் புகுந்து நுரையீரல்களில் அந்த உறுப்புகளை பாதித்து சுவாசிக்கும் பொழுது மூச்சுத்தினறல் வரட்டு இருமல் போன்றவற்றை ஏற்படுத்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தும் இவர்கள் தினம்தோறும் சிறிதளவு மணத்தக்காளிக் கீரை மற்றும் அதன் பழங்களை சாப்பிட்டு வந்தால் காச நோயின் தாக்கம் குறையும்
இந்த கொடிய நோயில் இருந்து நமக்கு விடுதலை வேண்டுமென்றால் மருத்துவமனை எல்லாம் போக தேவை இல்லை ஆரம்ப கால கட்டங்களில் இருந்தே மணத்தக்காளியை கீரையாகவோ அல்லது கொழம்பாகவோ சேர்த்து கொண்டால் நமக்கு இந்த நோயில் இருந்து விடுதலை கிடைக்கும். கல்லீரலுக்கு மிகவும் பலமூட்டும்.
புதிதாக கல்யாணம் ஆனவர்கள்
உடனே கருத்தரிக்க வேண்டும் என்று நினைக்கும் புதுமணத் தம்பதியர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், கரு வலிமை பெறும். குறிப்பாக பெண்கள் சாப்பிட்டு வந்தால், பிரசவம் எளிமையாக நடைபெறும்.
வலிமையான விந்தணு முக்கியமாக ஆண்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், அவர்களின் விந்தணு வலிமையுடன் இருக்கும்.
இதயம்
நெஞ்சு வலி மணத்தக்காளி கீரை மற்றும் பழத்தினை காய வைத்து, பொடி செய்து காலை மற்றும் மாலையில் 1/2 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், நெஞ்சு வலி குணமாவதோடு, இதயமும் வலிமையடையும்.
அடுத்ததாக நோய்வாய்ப்பட்டால் உடல் இளைத்தவர்கள் சுக்குட்டிக்கீரையை கொண்டு கஷாயம் செய்து தேன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும் அதேபோன்று மெலிந்த குழந்தைகளுக்கு மணத்தக்காளி கீரையை சமைத்து அடிக்கடி உணவில் சேர்த்துக் கொடுக்க குழந்தை நல்ல ஊட்டம் பெறும் அடுத்து ஒரு கைப்பிடி மணத்தக்காளிக் கீரையுடன் மிளகு பூண்டு திப்பிலி கால் டீஸ்பூன் அளவு மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்து அதில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் சளி இருமல் நோய்கள் குணமாகும், கண்பார்வையும் தெளிவு பெறும்…
சுக்குட்டிக்கீரையை வாரம் இரண்டு முறை அதிக காரம் புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும், முக்கியமாக கடுமையான உழைப்பின் காரணமாக உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் அலர்ஜியைப் போக்க முடியும் . மேலும் உடல் களைப்பை போக்கி நல்ல தூக்கத்தைக் கொடுக்கும் அதே போன்று மணத்தக்காளி வற்றல் 4 சுவை இன்மை வாந்தி வருவது போன்ற உணர்வு இவற்றைப் போக்க இந்த மணத்தக்காளி நல்ல பலன் கொடுக்கும் . எனவே கர்ப்பிணிப் பெண்கள் குறைந்த அளவில் தினமும் இந்த வற்றலை உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம்